The Hunger Site

Monday, May 25, 2009

அதுகளா அவர்கள்?

எட்டாம் நம்பர் வீட்டில் ஜீநோ வளர்கிறான்
அவனை நாய் என்று சொன்னால் கோபம் வரும் எஜமானருக்கு.
வாரம் மூன்று முறை ஷாம்பு குளியல்,
மாலை வேளைகளில் காற்று வாங்கும் சிறு நடை,
சைவம் அவனுக்கு சரி வராது;
எலும்பைச் சுற்றி இரண்டு விரற்கடை சதையோடு விருந்துதான் தினமும்
வெளியே வாழும் அன்வருக்கும் ராணிக்கும் எலும்பின் மிச்சமே கனவு!
மழைக்கும் வெயிலுக்கும் கோணியே கூரை,
படித்த புத்தகங்கள் எடைக்கு போக
படிப்பும் அப்பனோடு பாடையில் போச்சு...
எப்போதாவது எட்டிப் பார்க்கும் ஜீநோ,
அவர்கள் வாழ்வில் இன்னுமொரு பொறாமைப் பொருள் !
விசிறி எறியப்படும் எலும்பை ஒட்டியிருக்கும் ஒற்றை பருக்கைக்காக கை நீட்ட
காவலன் வந்து அதுகளை தள்ளிக் கொண்டு போனான்...
ஆடை, அலங்காரம், ஆண்டவன் எல்லாம் கிடக்கட்டும்
அத்தியாவசியமாய் அவர்களுக்கு உணவு மட்டுமாவது கிடைக்குமா?
ஏழை இந்தியாவை உலகுக்கு காட்டவாவது
பாவம் அதுகள் உயிர் பிழைத்து கொள்ளட்டும்...

0 comments: